Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
மதுரையில் லேசான மழை பெய்ததில் பல இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக மாறியுள்ளன.
 சனிக்கிழமை இரவு திடீரென மழை பெய்ததில் மதுரையில் பல இடங்களிலும் சாலைகளில் நீர் தேங்கி நின்றது. தண்ணீர் வெளியேற வழி இல்லாத சாலைகளில் வாகனங்கள் சென்றதால்  மேலும் அரிக்கப்பட்டு பள்ளமாக மாறின. மேலும் கொசுகள் உற்பத்தியாகும் இடமாகவும் அந்த இடங்கள் மாறியுள்ளன. மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க ஜெய்ஹிந்துபுரம், பெரியார் பேருந்துநிலையம், சிம்மக்கல் போன்ற பகுதிகளில் சாலைகள் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ள மணிநகரம் பகுதியில் சாலைகள் போர்களம் போல் சிதிலமாகி காணப்படுகின்றன.
 மதுரை பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேறும் சகதியுமான சாலைகளால் பள்ளிக் குழந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டனர். கொசுக்கள் உற்பத்தியாவதால் உடனடியாக சாலைகளை செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மதுரையைப் பொறுத்தவரை மழைநீர் வடிந்து செல்வதற்கான பாதைகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

0 comments: