Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
சொந்தமாக வீடு–கார் வாங்க ஆசைப்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட கார் டிரைவர்துரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விராலிப்பட்டி பாலத்தின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு தனியார் நிறுவன மேலாளர் மற்றும் கார் டிரைவரிடம் மிளகாய் பொடியை தூவி ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி உத்தரவின் பேரில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) பஞ்சாட் சரம் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் சங்கர், முருகானந்தம், குற்றவியல் சப்–இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், வெங்கடேஷ், ஏட்டுகள் முத்துபாண்டி, விஜய், மணிக்குமார், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்தனர்.
இதில் கார் டிரைவர் கருப்பையா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை முறைப்படி விசாரித்ததில், கொள்ளை சம்பவத்தில் உறவினர்களுடன் இணைந்து ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
இதன்பேரில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மைத்துனர் கருப்பையா, நண்பர் செல்வராஜ், திருச்சியில் உள்ள மருமகன் பொன்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ரூ.23½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளையில் ஈடுபட்டது குறித்து டிரைவர் கருப்பையா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
திண்டுக்கல் மேட்டுப்பட்டி வேளாங்கன்னி கோவில் தெருவில் குடியிருந்து வருகிறேன். நான் பைனான்ஸ் பிசினசும், வாடகை கார் ஓட்டிக்கொண்டும் பிழைப்பு நடத்தி வந்தேன். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கலில் பீடி–சிகரெட் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.
அதன்பின் வாரந்தோறும் அந்த நிறுவனத்தின் மேலாளருடன் மதுரை, திண்டுக்கல், நத்தம் பகுதிகளில் சரக்குகளுக்கு பணம் வசூல் செய்ய கார் ஓட்டி சென்ற போது ‘திடீர்’ என்று பண ஆசை உண்டானது.
சொந்தமாக கார் மற்றும் வீடு வாங்க வேண்டும் அதற்கு வசூல் செய்யும் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று எண்ணம் உருவானது.
அதன்படி கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரையிலிருந்து திண்டுக்கல் வரும் வழியில் வாடிப்பட்டி அருகே ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அங்கு இருட்டான பகுதி என்பதால் வாகனங்கள் வேகமாக சென்றபடி இருக்கும் அந்த இடத்தில் நான் கார் பஞ்சரானதாக கூறி காரை நிறுத்தி வைக்கிறேன்.
அப்போது மைத்துனர் கருப்பையாவும், நண்பர் செல்வராஜூம் அங்கு வந்து என்மீதும், மேலாளர் முத்துகிருஷ்ணன் மீதும் மிளகாய் பொடியை தூவி விட்டு வசூல் பணத்தை எடுத்து சென்று விடவேண்டும் என்று திட்டமிட்டோம். திட்டப்படி அவர்களும் வந்து அந்த பணத்தை எடுத்து சென்றனர். அவர்கள் அங்கு வரும்போது மிளகாய் பொடியை தூவி விட்டு பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு திண்டுக்கலுக்கு சென்றனர். ஆனால் போலீசாரின் சந்தேகம் என்மீது அதிகமானதால் நடந்த உண்மை ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்

0 comments: