Friday, March 20, 2015

On Friday, March 20, 2015 by Tamilnewstv in    
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெற உள்ளது இதை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அனைத்து உப சன்னதிகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது இந்நிலையல் கடந்த வாரம்இங்கு ஆய்வு  மேற்கொண்ட தொல்லியல் துறை ஆணையர் நரசிம்மன் மைய மண்டபத்தின் வலது புறம்வண்ணங்களால் வரையப்பட்டிருந்த தன்வந்திரி பெருமாள் ஓவியத்தை கண்டு பழமைவாய்ந்த அந்த ஓவியம் இருந்த மண் சுவரை துளையிட்டு ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார் அதன்பேரில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணியின் போது 4 அடி உயரத்தில் இருந்த மண் சுவரை அகற்றும் போது உள்ளே 20 அடி நீளம் 5 அடி அகலத்தில் கருங்கல்லால் ஆன பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது அந்த அறையின் தரைப்பகுதியில் சுமார் 2க்கு 2 அடி அளவுள்ள தூவாரம்    இருந்தது அதன் வழியாக பார்த்த போது அந்த அறைக்கு கீழே ஒரு பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது இரண்டு அறைகளும் ஒரே அளவில் இருந்தது அந்த அறையின் சுவர்களில் பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருந்தன

0 comments: