Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
சீரான குடிநீர் விநியோகிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் அக்கட்சியினர் திங்கள்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட 11-ஆவது வார்டு ஈ.பி.காலனியில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியிலிருந்து 8 நாள்களுக்கு ஒருமுறை 2 மணி நேரம் வீதம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், 8 நாள்கள் குடிநீரை சேமித்து வைத்தால், டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் எனக் கூறி, மாநகராட்சி நிர்வாகம் தாற்காலிகமாக ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் விநியோகிக்கிறது.
இதன்படி, தொடக்கத்தில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது 8 நாள்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடமும், கவுன்சிலர்களிடமும் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: