Tuesday, March 17, 2015

On Tuesday, March 17, 2015 by Unknown in ,    
திருப்பூரில் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இரு பெண்கள் உள்பட மூன்று பேரை காணவில்லை. இச் சம்பவம் தொடர்பாக, திருப்பூர் ஊரகம் மற்றும் மத்திய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி முருகேஷ்வரி (36). இவர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறி சென்ற முருகேஷ்வரி, மாலையாகியும் வீடு திரும்பவில்லை. தகவலறிந்த ராமமூர்த்தி, நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் விசாரித்துள்ளார். எனினும், அவரது மனைவியை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து, ராமமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதே போல், தாராபுரம் சாலை கோயில் வழி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜின் மகள் மகேஷ்வரி (22). அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில், திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
பாளையக்காடு கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த வள்ளி என்பவரின் மகன் ரமேஷ் (28). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்

0 comments: