Saturday, March 21, 2015

On Saturday, March 21, 2015 by Tamilnewstv in    


நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களை குறிப்பிட்டு ஐந்து தலங்களில் சிவபெருமான் காட்சி தந்து வருகிறார். இதில் முக்கியமான நீர்த்தலமாக திகழ்ந்து வருவது திருவானைக்கா கோயிலாகும். இந்தகோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பங்குனித்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இரண்டு தேரும் இரண்டு சிறிய தேரும் ஓரே நாளில் வீதி வலம்வருவது  இந்தத்திருத்தலந்தான். சாமிக்கு ஒரு தேரும் அம்மனுக்கு ஒரு தேரும்  என இருத்தேர்கள் புறப்படும் முதலில் சாமி தேரும் அடுத்து அம்மன் தேரும் புறப்பட்டு நான்காம் பிரகாரவீதிகளில் வலம் வரும் அதற்கு முன்னதாக விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனியாக இரண்டு சிறிய தேர்கள் தேரோடும் வீதிகளைச் சுற்றி வரும்.

0 comments: