Thursday, March 26, 2015

On Thursday, March 26, 2015 by Unknown in ,    
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் எ 1 கிளார்க்காக பணியாற்றி வருபவர் செல்லூரை சேர்ந்த கண்ணகி .உத்தங்குடி பகுதியை சார்ந்த செல்வராஜ் என்பவர் நகை அடகு கடை வைப்பதற்கு லைசென்ஸ் பெறுவதற்காக கடந்த ஜனவரி மாதக் கடைசியில் விண்ணப்பித்து இருந்தார் .அதற்கான கோப்பை தாசில் தாரிடம் கொண்டு சேர்ப்பதற்கு 4000 ரூபாய் லஞ்ச பணமாக தனக்கு தர வேண்டும் என கண்ணகி கேட்டுள்ளார் .பணம் தருவதாக ஒப்புக்கொண்ட செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்து விட்டு கண்ணகியிடம் பணத்தை கொடுப்பதற்காக வந்தனர் .பணத்தை மேஜையின் மீது வைக்க சொன்ன கண்ணகி தனது செல்போனை எடுத்து அதன் மேல் வைத்துள்ளார் .அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை டி எஸ் பி இசக்கி ஆனந்தன் தலைமையிலான படை கண்ணகியை கையும் களவுமாக பிடித்தனர் .தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே செயல்படும் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட சம்பவம் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .குரூப் 2 தேர்வு மூலம் பணிக்கு வந்து 1 வருடம் ஆவதற்குள் லஞ்சம் வாங்கிய வழக்கில் கண்ணகி கைதாவது குறிப்பிட தக்கது

0 comments: