Wednesday, April 15, 2015
திருப்பூர், : திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 60 பேரை போலீசார் கைது செய்தனர். மாட்டு இறைச்சியை தடை செய்துள்ளதை கண்டித்து, திருப்பூரில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பாக மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக போராட்டத்தில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் செய்ய மட்டும் அனுமதித்திருந்தனர். அதனால் அங்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அங்ககுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் தலித் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை, ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் கலந்து கொண்டனர்.
பெரியார் சிலை அருகில் ஏராளமான போலீசார் துணை ஆணையாளர் சுந்தரவடிவேல் தலைமையில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் தடைமீறி மாட்டிறைச்சி உண்ணும் போராட்டத்திற்காக மாட்டிறைச்சி உணவு ஒரு பாத்திரத்தில் கொண்டு வரப்பட்டது. அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் சாப்பிடுவதற்கு தயாரானார்கள். ஆனால் திருப்பூர் வடக்கு போலீசார், மாட்டிறைச்சி உணவை பறிமுதல் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். அவர்களை கே.எஸ்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இப்போராட்டம் காரணமாக காலை முதல் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
0 comments:
Post a Comment