Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர், : திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 87 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 46 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. 
திருப்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அலமேலு நடராஜன் லோக் அதாலத்தை துவக்கி வைத்தார். வட்ட சட்டப்பணி குழு தலைவர் நவமூர்த்தி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் தங்கராசு மற்றும் குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கிருபாகரன், வக்கீல்கள் ராஜூ பன்னீர் செல்வம், சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.45 மோட்டார் வாகன விபத்து இன்சூரன்ஸ் வழக்குகளில் 1.96 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. 32 வங்கி கடன் வழக்குகளுக்கு ரூ.30.23 லட்சத்துக்கும், ஆறு பொருளாதார வழக்குகளில் 1.18 கோடி ரூபாய்க்கும் சமரசம் ஏற்பட்டது. மொத்தம் 87 வழக்குகளில் 3.46 கோடி ரூபாய்க்கு சமரசம் எட்டபட்டது.

0 comments: