Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
அனுப்பர்பாளையம், : சேவூர் அருகே மளிகை கடை வியாபாரியிடம் மிளகாய் பொடிதூவி நூதனமுறையில் வழிப்பறி செய்த  பள்ளி மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  அவிநாசி ஒன்றியம் வேட்டுவபாளையம் ஊராட்சி அசநல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(35). இவர் சேவூர் அசநல்லிபாளையம் சாலையில் புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு மனைவி சங்கீதாவுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.  

அப்போது எதிரே டூவீலரில் வந்த 2 நபர்கள் முத்துசாமியை வழிமறித்தனர். வண்டியை நிறுத்துவதற்குள் முத்துசாமி, சங்கீதா மீது பைக்கில் வந்தவர்கள் மிளகாய் பொடியைத் தூவினர். கண்ணில் எரிச்சலுடன் முத்துசாமியும், சங்கீதாவும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். ஆனாலும் முத்துசாமியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். சங்கீதா சத்தம் போட்டுக் கொண்டே  நகைகளை கெட்டியாக கையில் பிடித்துக் கொண்டதால் 9 பவுன் தாலிக்கொடி தப்பியது. சேவூர் போலீசார் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தினர். நகை பறிப்பில் ஈடுபட்டது சேவூரில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் அவினாசி காமராஜ் நகரை சேர்ந்த செல்வராஜ் மகன் மருதாசலம் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

0 comments: