Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர்: : மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகை யில் மாபெரும் கல்வி கண்காட்சியை உங்கள் தினகரன் 5-வது முறையாக திருப்பூர் காயத்ரி மஹாலில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது.  எஜுகேஷன் எக்ஸ்போ, மெடிக்கல் எக்ஸ்போ, ஹவுசிங் எக்ஸ்போ போன்ற பல் வேறு கண் காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி மக்க ளின் பேராதரவை பெற்ற உங்கள் தினகரன் திருப்பூரில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு  நாட்கள் மாபெரும் கல்வி கண்காட்சியை திருப்பூர் காயத்ரி மஹாலில் நடத்த இருக்கிறது.இக்கண் காட்சி யை கோவை நேரு குரூப் கல்வி நிறுவனங்கள் ஸ்ரீ கிரு ஷ்ணா கல்வி நிறுவனங் கள்,பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள், ஆகியவற் றுடன் இணைந்து தினகரன் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் ரேடியோ பார்ட்னராக சூரியன் எப்.எம்.மும் மீடி யா பார்ட்னராக தமிழ் முரசும் உள்ளன.

இம்மாபெரும் கண் காட்சியில் கோவை, திருப் பூர், ஈரோடு மட்டு மின்றி தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனங்கள், வெளி நாட்டு கல்வி ஆலோசனை நிறுவன ங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க இருப்பது சிறப்பு அம்சமாகும். 
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனங் களின் அரங்கு களும் இதில் இடம் பெற்று இருப்பது மாணவ சமுதாய த்திற்கு பயனுள்ள விஷய மாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கண்காட்சிக்கு கிடைத்து வரும் அபரிமித மான வரவேற்பை தொட ர்ந்து கூடுதல் பிரம்மாண் டத்து டன் இம்முறை இந்த மாபெரும் கல்வி கண்காட்சி யை உங்கள் தினகரன் நடத்துகிறது.

+2க்குப் பின் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்க லாம் ? என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக சிறந்த கல்வியா ளர்களின் ஆலோசனைகள், பட்ட படிப்பிற்கு பிறகு மேல்ப டிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவ, மாணவி களுக்கான வழிமுறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், முதுகலை கல்வி பயில்வோர், பட்டய படிப்பு படிப்பவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிப்ப வர்கள் பயன்பெறும் வகை யிலான  ஆலோச னைகள் என எல்லா வகை யான கல்விக்கும் தேவை யான அனைத்து தகவல்களும் ஒரே கூரை யின் கீழ் கிடைக்கச் செய்யும முழுமை யான கல்வித் தகவல் களஞ்சியம் இந்த கல்வி கண்காட்சி என்றால் மிகையல்ல. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெ றும் இக்கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் கல்வி ஆலோசனை புத்தகம் இலவசமாக வழங்கப் படுகிறது.

0 comments: