Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர் மாநகராட்சியின் 41-ஆவது வார்டுக்கு உள்பட்ட சந்திராபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 திருப்பூர் மாநகராட்சி 41-ஆவது வார்டுக்கு உள்பட்ட சந்திராபுரம் கிழக்கு, ஸ்ரீ பண்ணாரி அம்மன் நகர், ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் நகர், ராஜீவ்நகர் மேற்கு, இந்திரா நகர் கிழக்கு, 5-ஆவது வீதி, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
 இப்பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கும் நிலை இருந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல், சந்திராபுரம் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் தங்கவேல் கூறியதாவது:
 இப்பகுதியில் ரூ.40 லட்சத்தில் வடிகால் வசதி ஏற்படுத்த திட்டம் தயாராக உள்ளது. சந்திராபுரம் பகுதியில் கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும். இதைத்தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

0 comments: