Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டுமென கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சங்கத்தின் தாராபுரம் கோட்ட மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வட்டாரத் தலைவர் பரமசிவம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தாராபுரம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை முறையாக விநியோகிக்க வேண்டும். தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு மருத்துவர் இல்லாததால், விபத்தில் படுகாயமடைவோர் திருப்பூர், கோவை போன்ற அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கும் நிலை நிலவுகிறது. எனவே, எலும்பு முறிவு மருத்துவரை நியமிக்க வேண்டும்.
தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூனில் ஏலம் விடப்பட்டது. இதன்மூலம் நகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1.5 கோடி வருவாய் அதிகரிக்கும் என்றும், இதன்மூலம் நகரபகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில், ஏலம் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதைக் காரணம் காட்டி, கடந்த 11 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் நிலுவையிலுள்ள வாடகை தொகையை விரைந்து வசூல் செய்யவேண்டும்.

0 comments: