Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடிகளைத் தாண்டியதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்கத் தலைவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ.18 ஆயிரம் கோடிகளாக இருந்த பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு 3 ஆண்டுகளில் இருமடங்காக உயரும் என எதிர்பார்த்திருக்கிறோம். 38 வங்கிகளிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 15.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.21 ஆயிரம் கோடிகளாக உயரும் என்று திட்டமிட்டு இருந்தோம். இது தற்போது ரூ.20 ஆயிரத்து 730 கோடிகளாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடனும், கனடாவுடனும் திறந்த நிலை வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மெக்சிகோ, ரஷ்யா, பனாமா, அமெரிக்க நாடுகள், பிரேசில் போன்ற நாடுகளுக்கு எளிய முறையில் ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் வகையில் சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: