Tuesday, April 07, 2015

On Tuesday, April 07, 2015 by Unknown in ,    
Displaying 7.4.2015 3.jpg
மதுரை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.7-ம் தேதி) இந்திரதனுஷ் தடுப்பூசித் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால், அதை மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையில் செவ்வாய்க்கிழமை இம்முகாம் நடைபெறும் இடங்கள்: அருள்தாஸ்புரம், செல்லூர், நரிமேடு, பீபிகுளம், கே.புதூர், சாத்தமங்கலம், முனிச்சாலை, பாலரெங்காபுரம், அனுப்பானடி, வில்லாபுரம்., சுந்தரராஜபுரம், பைக்காரா, பெத்தானியபுரம், திடீர்நகர், அன்சாரி நகர், புட்டுத்தோப்பு, அண்ணாத்தோப்பு.
முகாம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்கள், அரசு, தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு ஊசி போடப்படும்.
குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகள் விவரம்: குழந்தை பிறந்தவுடன் பி.சி.ஜி., போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருக்கவேண்டும். ஒன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட்02, போலியோ-2, மூன்றரை மாதத்தில் பெண்டாவேலண்ட் 3, போலியோ 3, ஒன்பது மாதம் முடிவில் தட்டம்மை, ஜப்பானிஸ் என்செபலைடிஸ் 1, ஒன்றரை வயதில் ஜப்பானிஸ் என்டிசபலைடிஸ் ஊக்குவிப்பு ஊசி, ஒன்றரை வயதில் டி.பி.டி. ஊக்குவிப்பு ஊசி, தட்டம்மை ஊக்குவிப்பு ஊசி அளிக்கப்பட்டிருக்கவேண்டும்.
கர்ப்பிணிகள் ஊசி: கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரணஜன்னி முதல் தவணை, ஒரு மாதம் கழித்து மீண்டும் ரணஜன்னி இரண்டாவது தவணை, இத்தகைய ஊசி போடாத கர்ப்பிணிகளுக்கு முகாமில் ஊசிகள் போடப்படும் என்றும் மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: