Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
உடுமலை :  உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பணியில் யாரும் இல்லை. சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு பதில் போக்குவரத்து போலீசார், புறக்காவல் நிலையத்தை ஆக்கிரமித்ததோடு பயணிகள் அமரக்கூடிய இடம் மற்றும் நடைபாதையை கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் ஒதுங்குவதற்கு இடமில்லை. பஸ்நிலைய கடைகள் முன் தஞ்சம் புகும் பயணிகளை கடைக்காரர்கள் விரட்டி அடிக்கின்றனர்.

 பஸ்நிலையத்தில் பிக்பாக்கெட், வழிப்பறிக்கு ஆளாகி புறக்காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொதுமக்களை குட்டைத் திடல் காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்கும்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். பணத்தை பறிகொடுத்த அப்பாவி பொதுமக்கள் பஸ் நிலையத்திலேயே அழுது புலம்பி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் போலீஸ் ரோந்து குறைந்து விட்டதால் குற்றசம்பங்கள் அதிகரித்து வருகிறது.

0 comments: