Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர், :     உடுமலை அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்ற கூலித்தொழிலாளிக்கு திருப்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.  உடுமலை குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூரை சேர்ந்தவர் செல்லமுத்து (26). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014 மார்ச் 28 ம் தேதி மாலை 7 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு, செல்லமுத்துவை அடித்து விரட்டினர். 

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், உடுமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தலீலா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற செல்லமுத்துவுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபாரதமும் அளித்து நீதிபதி வசந்தலீலா தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

0 comments: