Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை தடை செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.    அனைத்துக் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கே.எம்.சுப்ரமணி தலைமை வகித்தார். ஜி.கே.கேசவன், எம்.சி.பழனிசாமி, எம்.ஆனந்தன், கே.என்.பழனிசாமி, கே.கே.ராசுக்குட்டி, கே.சி.சென்னியப்பன், ஏ.சரவணன், எஸ்.சின்னசாமி, எஸ்.சங்கமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது:  பிரச்னைக்குரிய பனியன் நிறுவனத்திற்கு தடை விதிக்கக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர், விவசாயக் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பகுதியில் வெளியேறும் சாயக்கழிவு நீரால், விவசாய நிலம், ஆழ்துளை கிணறு, விவசாயத் தோட்டக் கிணறு உள்ளிட்டவை மாசுபட்டு, நஞ்சு உண்டாகி உள்ளது.

 இதனால் கால்நடைகள், பொதுமக்கள் குடிநீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இப்பிரச்னையால் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரண்டு மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், இவ்வாறு தெரிவித்தனர்.

0 comments: