Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர், : மே தினத்தின் 129வது ஆண்டு விழாவை உழைப்பாளிகள் நகரமான திருப்பூரில் பேரெழுச்சியோடு கொண்டாடுவது என்று சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளன. திருப்பூர் சிஐடியு அலுவலகத்தில் ஏஐடியுசி, சிஐடியு நிர்வாகிகள் கூட்டம் ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏஐடியுசி தலைவர் ரவி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர், ராமசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பனியன் தொழிற்சங்கத் தலைவர் காமராஜ், பொதுச் செயலாளர் மூர்த்தி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இக்கூட்டத்தில், மே தினத்தின் 129வது ஆண்டு விழா நிகழ்ச்சிகளை திருப்பூர் மாவட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்துகின்றன. மே 1ம் தேதி திருப்பூர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை நேரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மே தின விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படுகின்றன.  அன்று மாலை 4 மணியளவில் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சங்கமித்து மாபெரும் செம்படைப் பேரணி புறப்பட்டு, ரயில்வே மேம்பாலம் வழியாக, குமரன் ரோடு, மாநகராட்சி வழியாக பல்லடம் ரோட்டில் உள்ள அரிசிக்கடை வீதியை அடைகிறது. அரிசிக்கடை வீதியில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 

இந்த பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்கிறார். ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சேகர் வரவேற்கிறார். சிஐடியு தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். திருப்பூர் மாநகரின் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

0 comments: