Saturday, January 09, 2016

On Saturday, January 09, 2016 by Tamilnewstv in    
விமான பராமரிப்பு பணிகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில் புதிய விமான கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவுடன் கடந்த இரண்டு நாட்களாக திருச்சியில் முகாமிட்டு உள்ளார். திருச்சி விமான நிலையத்தில் ஆய்வுää ஓடுதள பாதை விரிவாக்கத்திற்காக பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்ää தேசிய தொழில்நுட்ப கழக விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது….. திருச்சி விமான நிலையத்தில் எல்லா ரக சரக்குää பயணிகள் விமான போக்குவரத்து நடைபெற ஓடுதள பாதையை விரிவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்பணிக்கு இந்திய விமான போக்குவரத்து ஆணையம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால் நிலம் கையப்படுத்தும் பணியில் மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம் இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளோம். விமான எரிபொருள் மீதான வரியினை குறைக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளோம். எரிபொருள் மீதான வரியினை குறைக்க மகாராஷ்டிராää சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் முன் வந்துள்ளன. அதே போல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் முன் வந்தால் விமான கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு 5 சதவீதமாக குறைக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர் தொடர்ந்து பேசும் போது…… விமான போக்குவரத்தில் புதிய கொள்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக விமான போக்குவரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் மேலும் இதில் ஒரு பகுதியாக விமானங்களின் பராமரிப்பு பணியினையும் இந்தியாவிலேயே மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவோம். இந்தியாவில் புதிதாக இரண்டு விமான நிறுவனங்கள் சேவை தொடங்கபட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன என்று கூறிய அவர் தொடர்ந்து பேசும்போது….. இந்தியாவில் 40 விமான நிலையங்கள் செயல்படாமல் உள்ளது. இவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கட்டணங்களை குறைக்க முன்வரும். ஆனால் நீண்ட நாட்களுக்கு கட்டணங்களை குறைக்க இயலாது. மாவட்டம் தோறும் விமான நிலையம் என்ற திட்டத்திற்கு தற்போது வாய்ப்பில்லை.

0 comments: