Saturday, January 09, 2016

On Saturday, January 09, 2016 by Tamilnewstv in    


இலங்கை அரசு கேட்கும் இரண்டு கேள்விக்கு பதில் கிடைத்தாலே தமிழக மீனவர்கள் பிரச்னை முடிவுக்கு வரும் திருச்சியில் ஹெச்.ராஜா பேட்டி

திருச்சி பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கீயதன் மூலம் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த ராஜா 2007 ம் ஆண்டு முதலே விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்க்கப்பட்டு திட்டமிட்டே ஜல்லிகட்டை முடக்க நினைத்தது காங்கிரஸ், தி.மு.க வே காரணம் என தெரிவித்த அவர் தடை விதிக்கப்பட்ட ஜல்லிகட்டுக்கு நீதிமன்றம் மூலம் பீட்ட அமைப்பு மீண்டும் தடைகொரும் என்னத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுருத்தியிள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது காளைகளை துன்புறுத்துவது எனக்கூறும் விலங்குகள்  நல அமைப்பு (பீட்டா) கர்ப்பிணியாக இருந்த 300 பசுமாடுகளை கேரளாவிற்கு கொண்டு செல்வது பீட்ட விற்கு தெரியவில்லையா என கேள்வி எளுப்பியிள்ளார். தமிழக மீனவர் பிரச்சனையில் இந்திய மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்தால் நாங்கள் எங்கு செல்வது எனவும், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள போட்டுகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதை நிறுத்த முடியுமா என இலங்கை அரசு கேட்கும் இந்த இரண்டு  கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் மட்டுமே மீனவ பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் எனவும் ஹெச்.ராஜா  தெரிவித்தார்.

0 comments: