Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 
 ”இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உள்ளார்ந்த அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் இயங்கி வருகின்றனர். அகிம்சைதான் எங்களின் அடிப்படை தத்துவமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் அனைத்து தீவிரவாதமும்  ஏற்றுமதி செய்யபப்ட்டவையே. இந்தியாவில் எந்த தீவிரவாதமும் வளர்ந்தது கிடையாது.சமீபத்தில் நான் சி.என்.என் க்கு அளித்த பேட்டியில், இந்திய முஸ்லீம்கள் அல்கொய்தாவின் திட்டத்தை தோற்கடிப்பார்கள் என கூறியிருந்தேன் என்று வெளியுறவு  கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி ஒன்றிற்கு பேட்டி அளித்த மோடி தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பணையகைதிகளை கொலை செய்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வக்கிரமானது. பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டு அது தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதை உங்களால் கற்பனை செய்து முடிகிறதா. நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இது நமக்கு மிகப்பெரிய சவாலானது. இந்தியா 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் நல்லது மோசமானது என்ற எந்த வேறுபாடும் பார்க்க முடியாது. தீவிரவாதம் என்பது தீவிரவாதம் தான் என்று தெரிவித்தார். 

0 comments: