Showing posts with label நியூயார்க். Show all posts
Showing posts with label நியூயார்க். Show all posts
Wednesday, October 01, 2014
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணமான வழமையான இலக்குகளைத் தாண்டி செல்லவேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவின் உண்மையான சாத்தியக்கூறுகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் இருவரும் இணைந்து எழுதிய கட்டுரையில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரங்களில் அவர் வகித்த சர்ச்சைக்குரிய பங்குக்காக அமெரிக்கா அவருக்கு விசா தர மறுத்த பின்னணியில், இப்போது அவருக்கு அமெரிக்கா தந்திருக்கும் வரவேற்பு நேரடி மாறுபாடானது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாக தேக்கம் பெற்றுள்ளதாக நோக்கர்கள் கூறுகின்றனர்.
மோடியின் அமெரிக்க விஜயம் இந்த உறவுக்கு புத்துணர்வை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்துப் பேசியுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இஸ்ரேலியப் பிரதமர், இலங்கை அதிபர் உள்ளிட்ட பிற நாட்டுத் தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
Tuesday, September 30, 2014
இந்தியாவில் இருக்கும் எல்லா தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது என்றும் இந்தியாவில் அது வளர்க்கப்படுவதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
”இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் உள்ளார்ந்த அடிப்படை தத்துவங்களின் அடிப்படையில் இயங்கி வருகின்றனர். அகிம்சைதான் எங்களின் அடிப்படை தத்துவமாக உள்ளது. இந்தியாவில் நிலவும் அனைத்து தீவிரவாதமும் ஏற்றுமதி செய்யபப்ட்டவையே. இந்தியாவில் எந்த தீவிரவாதமும் வளர்ந்தது கிடையாது.சமீபத்தில் நான் சி.என்.என் க்கு அளித்த பேட்டியில், இந்திய முஸ்லீம்கள் அல்கொய்தாவின் திட்டத்தை தோற்கடிப்பார்கள் என கூறியிருந்தேன் என்று வெளியுறவு கவுன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கேள்வி ஒன்றிற்கு பேட்டி அளித்த மோடி தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பணையகைதிகளை கொலை செய்தது குறித்து பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வக்கிரமானது. பத்திரிகையாளர் தலை துண்டிக்கப்பட்டு அது தொலைக்காட்சிகளில் காட்டப்படுவதை உங்களால் கற்பனை செய்து முடிகிறதா. நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். இது நமக்கு மிகப்பெரிய சவாலானது. இந்தியா 40 ஆண்டுகளாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தில் நல்லது மோசமானது என்ற எந்த வேறுபாடும் பார்க்க முடியாது. தீவிரவாதம் என்பது தீவிரவாதம் தான் என்று தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
