Wednesday, February 26, 2020

On Wednesday, February 26, 2020 by Tamilnewstv in ,    
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான
வரைவு வாக்குச்சாவடி பட்டியல்
மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்டார்

திருச்சிராப்பளளி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல -2020க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் இன்று 26.02.2020) மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார். மேலும், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும்   கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
 
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண்.1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் மொத்தம் 771 வார்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் மொத்தம் 7,59,284 உள்ளார்கள்,  ஆண் வாக்காளர்கள் 3,68,806 பெண் வாக்காளர்கள் 3,90,380 திருநங்கைகள்89 வாக்காளர்கள் உள¦ளார்கள்என்ற விவரத்தினை ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.

0 comments: