Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
உடுமலை, :  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மே 2ம் தேதி இந்த ஆண்டின் கரும்பு அரவை துவங்கப்பட உள்ளது. முன்னதாக நேற்று காலை 10 மணிக்கு ஆலை வளாகத்தில் இளஞ்சூடு ஏற்றுவிழா நடைபெற்றது. விழாவிற்கு மேலாண்மை இயக்குனர் இந்துமதி தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சண்முகவேலு எம்.எல்.ஏ கலந்து கொண்டு இளஞ்சூடு ஏற்று விழாவை துவக்கி வைத்தார். 
இந்த ஆண்டில் அமராவதி சர்க்கரை ஆலையில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரவை முடிந்த பின்னர் வெளி மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் டன் கொள்முதல் செய்து அரவை பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.அமராவதி அணை, புறந்தலாறு ஆகிய பாசனப்பகுதிகளில் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது. 

குறிப்பாக கொமரலிங்கம், மடத்துகுளம்,  தாராபுரம், பழநி, நெய்க்காரன்பட்டி, பல்லடம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. விழாவில் தலைமை பொறியாளர் கமல் பிரசாத், தலைமை ரசாயனர் சம்பத்குமார், கரும்பு பிரிக்கும் அலுவலர் ரவிச்சந்திரன்,அமராவதி கூட்டுறவு சர்க்கரை நிர்வாக குழு தலைவர் சின்னப்பன், உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஈஸ்வரன், சாமுராயப்பட்டி ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்த ஆண்டு அரவைக்காக 814 புதிய விவசாயிகள் கரும்பு கொள்முதல் செய்ய பதிவு ெசய்துள்ளனர்.

0 comments: