Friday, December 05, 2014

On Friday, December 05, 2014 by Unknown in ,    
Displaying DSC_0174.JPGDisplaying DSC_0188.JPGDisplaying DSC_0206.JPG மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் அஜித்குமார் (17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.இவர்கள் இருவரும் அந்தப் பகுதியில் அய்யனார் கோவில் அருகே உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் நேற்று குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் அவர்கள் இருவரையும் வழிமறித்துள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த கும்பல் முத்துராஜாவை சுற்றி வளைத்து அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜா துடிதுடித்து இறந்தார்.அங்கிருந்து தப்பிச் சென்ற அஜித்குமார் ஊருக்குள் சென்று முத்துச்சாமியின் உறவினர்களிடம் தகவல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த உறவினர்கள் முத்துராஜா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை எடுத்துக்கொண்டு பொட்டப்பாளையம் மெயின் ரோடு பகுதிக்கு வந்தனர். அங்கு அவருடைய உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்முகுந்த் கோட்னிஸ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் புருசோத்தமன், ராமசாமி, உதவி கலெக்டர் சேக் முகைதீன் மற்றும் திருப்புவனம் தாசில்தார் காசி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. இதனைத்தொடர்ந்து அங்கு வந்த தேவர் தேசிய பேரவை மதுரை மாவட்ட தலைவர் சித்தன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் அவர் அதிகாரிகளிடம் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், பொட்டப்பாளையம் பகுதிக்கு ரேஷன் கடை தனியாக செயல்பட வேண்டும், இங்கு எப்போதும் போலீசார் இருக்கும் பொருட்டு ஒரு துணை போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அதன் பின்னர் அவரது உறவினர்கள் முத்துராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 4 மணி நேரத்திற்கும் மேல் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொட்டப்பாளையம், பாட்டம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த கொலை தொடர்பாக திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த சித்திரைச் செல்வன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு குவிந்த முத்துராஜாவின் உறவினர்கள் சாதிய ரீதியான விரோத போக்குடன் இந்த படுகொலை நடைபெற்று உள்ளதாகவும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு தங்கள் பகுதிக்கு தனி காவல் நிலையம் ,பாதை ,ரேசன் கடை ஆகியவை அமைத்து தருவதோடு பலியான வாலிபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும் அவரது தம்பிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து சுமார் 4 மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பின்னர் அப்பகுதிக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் துறை துணை ஆணையர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களின் சார்பில் பேசிய தேவர் தேசிய பேரவை நிறுவனர் திருமாறன் ,சுந்தர வள்ளி ஒச்சாத்தேவர் ,அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட  செயலாளர் கணேசன் ,இளைஞரணி  செயலாளர் ராஜ்குமார் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர் பின்னர் மறியல் கைவிடப்பட்டது ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை வாங்கிட மாட்டோம் என தெரிவித்தனர் .அரசு மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

0 comments: