Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
திருப்பூர், :    திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றனர்.  திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை ஆகியவை முக்கியமானவை.திருப்பூரில் நாளுக்கு நாள்  இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றுகின்றனர். 

மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள  பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி  போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.

0 comments: