Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர்.
 திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அதனால், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
 இந்நிலையில், திருப்பூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி, வீரபாண்டி காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் வீட்டின் உரிமையாளர்களின் ஆவணங்கள், குடியிருப்போர்களின் ஆவணங்கள் ஆகியவை சரி பார்க்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் தேனி, மதுரை, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த
இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

0 comments: