Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    




தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல், அமராவதி அணைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு ரசித்தனர். அணைப் பகுதியில் உள்ள பூங்கா, மீன் பண்ணை ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
 தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னார் மலைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பூங்கன் ஓடைப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள், யானைகளை கண்டு ரசித்தனர். உடுமலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

0 comments: