Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 திருப்பூர், மிஷின் வீதி, வளம் பாலம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அய்யாசாமியின் மகன் சுரேஷ் (28). பனியன் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை, வெங்கமேட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சைக்கிளில் சென்றார்.
 வெங்கமேடு நல்லாத்துபாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி சுரேஷை மிரட்டி சைக்கிளைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸாரிடம் சுரேஷ் புகார் அளித்தார்.
 இதையடுத்து, பூலுவப்பட்டி சோதனைச் சாவடி அருகே அனுப்பர்பாளையம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் குப்பாயம்மன் காடு பகுதியைச் சேர்ந்த பாப்புசாமி மகன் ராஜேஷ்(22) என்பதும், சுரேஷை மிரட்டி சைக்கிளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

0 comments: