Wednesday, April 15, 2015

On Wednesday, April 15, 2015 by Unknown in ,    
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, அண்ணா நகரைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் ராமசாமி(33). இவருக்குச் சொந்தமாக பாண்டியன் நகரில் உள்ள கிடங்கில் ஏற்றுமதி தரம் உள்ள பனியன்களை வைத்து இருந்தார்.
அந்தக் கிடங்கில் லோகேஸ்வரன்(23), ஸ்ரீதர்(21), குமார்(22) ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அந்தக் கிடங்குக்குள் புகுந்த 3 பேர், லோகேஸ்வரன், ஸ்ரீதர், குமார் அறையில் அடைத்து வைத்து, அங்கிருந்த ரூ.80 லட்சத்திலான பனியன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
 இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் நூர்பாட்சா, ரவிசந்திரன், மணிஹாசன், பிச்சைமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய நசீர், சிராஜ்தீன், சேக், பாபு, ஷாநவாஸ் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதி மன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர்.
 இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை ரத்தினபுரம் ஜெய்ஹிந்த்புரம் முதல் வீதியைச் சேர்ந்த ராமராஜின் மகன் நாகராஜ் (34), திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
 இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜின் தம்பி பாலாஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.

0 comments: