Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
உடுமலை நகரில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் தி.சேஷாசலம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ரா.செல்வராஜ் வரவேற்றார். செயலாளர் கே.ஆறுமுகம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதில், உடுமலையில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இத்திட்டத்தை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.  சார்- கருவூல அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கு காத்திருப்பு அறை அமைத்துக் கொடுக்க வேண்டும்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014-இல் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சி.எம்.வேலுச்சாமி, மு.பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகிகள் கே.கே.அன்பழகன், எஸ்.ரகோத்தமன், கே.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொ ண்டனர். ஆர்.சுகுமார் நன்றி கூறினார்.

0 comments: