Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
காங்கயத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அப்பெண்ணின் கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், சக்தி நகரை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (50). இவரது மகள் அஸ்ரப் நிஷா (21). இவருக்கும் காங்கயம், ராஜாஜி வீதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரின் மகன் நசீர் (25) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வரதட்சிணை கேட்டு நசீர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு நசீரின் தாயார் மும்தாஜ் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த அஸ்ரப்நிஷா செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஸ்ரப்நிஷாவின் தந்தை காங்கயம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு ) பிச்சை, உதவி ஆய்வாளர் சாஸ்தா இந்துசேகரன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அஸ்ரப்நிஷாவின் கணவர் நசீர், அவரது தாயார் மும்தாஜ் ஆகியோர் காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

0 comments: