Monday, April 20, 2015

On Monday, April 20, 2015 by Unknown in ,    
சேவூர் அருகே ஆலத்தூர் ஆத்திக்காட்டுப்பாளையத்தில், தனியார் நூற்பாலையை தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த நூற்பாலை கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், 2012 பிப்ரவரி முதல் எவ்விதக் காரணமும் இன்றி நூற்பாலை மூடப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளர்களுக்கும், நூற்பாலை நிர்வாகத்துக்கும் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, மூடிக்கிடக்கும் நூற்பாலையில் உள்ள இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக வெள்ளிக்கிழமை காலையில் வாகனங்கள் வந்துள்ளன. இதையறிந்த தொழிலாளர்கள் திரண்டு வந்து வாகனங்களை வெளியே செல்லவிடாமல் கற்களைப் போட்டுத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், வழக்கு முடியும் வரை இயந்திரங்களை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, வாகனங்களில் ஏற்றப்பட்ட இயந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

0 comments: