Wednesday, May 20, 2015

On Wednesday, May 20, 2015 by Tamilnewstv in    

கிராமாலாயாநிறுவனம் திருச்சிராப்பள்ளி மற்றும் சுகாதார அமைச்சகம் புது டெல்லி ஆகியவை இணைந்து நடத்தும் 3நாள் பயிற்சி

கிராமாலாயா நிறுவனம் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் புதுடெல்லி ஆகியவை இணைந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறியாளர்களுக்கு நீடித்த நிலைத்த கிராமக்குடிநீர் வழங்குதலை உறுதிசெய்தல் என்கிற தலைப்பில் மாநில அளவில் 3நாள் பயிற்சி 20முதல்22 வரை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ரெசிடென்ஸியில் நடைபெறுகிறது இன்றுமுதல் ஆராம்பிக்கப்படுகிறது இப்பயிற்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 30 பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இப்பயிற்சியின் துவக்கவிழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தஞ்சை பிராந்தியத்தின் தலைமைப்பொறியாளர் இளங்கோவன் துவக்கவுரை ஆற்றினார். டாக்டர் பொன்னுராஜ் சுகாதார வல்லுனர் தலைமையுரையும் தமோதரன் நிறுவனர் கிராமாலயா கருத்துரையும் கீதா ஆலோசகர் கிராமாலயா சிறப்புரையும் வழங்கினார்கள்.
இந்த 3நாள் பயிற்சியின் நோக்கங்கள்
நீடித்த மற்றும் நிலைத்த கிராமக் குடிநீர் வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல்
நீர்நிலைகள் மாசுபடுவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகள் அதற்கான தீர்வுகள்
நிலத்தடி ஆதாரங்களையும்  மேல்மட்ட நீர் நிலைகளையும் நிலைத்தத்தன்மையுடன் பாராமரித்தல் மற்றும் சிறந்த முறைய்pல் செயல்படவைத்தலின் முக்கியத்துவத்துத்தை வலியுறுத்துதல்
கிராமக்குடிநீர் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு மற்றும் பொறுப்புகளை அறிந்து அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவித்தால் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் முறைகளை தெரிந்து கொள்ளுதல் மற்றும் நிறைவேற்றிட ஊக்குவித்தல் நீர்நிலைகள் மாசுபடாமல் காத்திடவும் கண்காணித்திடவும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கிடுதல்
மூன்றுநாள் பயிற்சியில் 2ம் நாள் களப்பயணாமாக சுனைப்புகநல்லூர் கிராமம் மற்றும் கிராமாலாயா பயிற்சி நிறுவனத்திலுள்ள கழிப்பறை தொழில் நுட்பப்பூங்காவிற்கு அழைத்துச்செல்லப்ட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments: