Monday, September 25, 2017
திருச்சி – 25.09.17 கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
On Monday, September 25, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி – 25.09.17
கமலஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார்
திருச்சி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குபவர்களுக்கு தங்கநாணயம் வழங்குதல் என மாநகராட்சி தூய்மை பேணிகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனிடையே திடக்கழிவு மேலாண்மையினை மேம்படுத்தவும் தூய்மை திருச்சி தூதுவராக இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் தில்லைநகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக குப்பைகளை அப்புறப்படுத்திய ரெசிடென்சிக்கு விருது வழங்கப்பட்டது, தொடர்ந்து பொதுமக்களுக்கு மக்களும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதற்கு இருவண்ண குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையர் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து பசுமையினைப்பேணும்வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் பேசிய ஜேம்ஸ்வசந்தன், திருச்சியினை தூய்மையாக வைத்திருக்க அனைவரும்பாடுபடவேண்டும், தொடர்ந்து தூய்மை பட்டியலில் திருச்சி தக்கவைப்பதன்மூலம் நம்மை பாதுகாக்க முடியும் என்றார், மேலும் கமலஹாசன் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதாகவும், அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாகவும், நல்லது செய்யும் எண்ணமுடைய எவரும் அரசியலுக்கு வரலாம் என்றும் கருத்து தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment