Thursday, October 05, 2017

On Thursday, October 05, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே  தீராம் பாளையத்தில் உள்ள காந்திய நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் 2லட்சம் மரக்கன்றுகள் வழங்கினார் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தீராம் பாளையம் காந்திய நடுநிலைப் பள்ளியை தத்தெடுத்து விதைப்பந்து தயாரித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர், 


(விதைப்பந்து என்பது மர செடி விதைகளை செம்மண் உருண்டை செய்து அதன் நடுவில் வைத்து அதைபந்து போல் உருட்டி வைத்து அதனை நம் நினைக்கும் இடத்தில் வீசி விட்டால் மழை காலத்திலோ அல்லது அதன் மீது தண்ணீர் பட்டாலோ அந்த விதை முலைத்து விடும்) அதே போன்று பிளக்ஸ் பேனர்கள் வைத்து மாணவ மாணவியர்க்கு பேனா பென்சில் வைக்க பர்ஸ் வடிவமைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் திருமலைராஜ், முன்னால் துணை ஒன்றிய தலைவர் ராமசாமி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் கோபி கிருஷ்ணன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் தங்கரமேஷ் ,முனைவர் அருண் பிரகாஷ் கலந்து  கொண்டனர்.                 


பேட்டி ... முனைவர் அருண் பிரகாஷ்
பேட்டி ... மாணவி யோக லெட்சுமி


0 comments: