Sunday, October 08, 2017

On Sunday, October 08, 2017 by Tamilnewstv in    
8.10.17
அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்கு
 திருச்சி : தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க மாநாடு "EMICON 2017 " அப்போலோ சிறப்பு மருத்துவமனை மூன்றாம் ஆண்டாக  ஞாயிற்றுக்கிழமை, ஹோட்டல் சங்கத்தில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திருச்சி அப்போலோ சிறப்பு  மருத்துவமனையின் மருத்துவமனை நிர்வாகி மற்றும் துணை மருத்துவ இயக்குனர் டாக்டர் S . செந்தில்குமார் அவர்கள் வரவேற்று பேசினார். 

இந்த சிறப்பு மருத்துவ கருத்தரங்க நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் திருச்சி கி. ஆ. . விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர் G . அனிதா அவர்கள், திருச்சி IIM இயக்குனர் டாக்டர். பீமராய மேட்ரி அவர்கள், திருச்சி மருத்துவ கல்வி துறையின் கெளரவ இயக்குனர் மற்றும் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் முதுநிலை இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் M . சென்னியப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 

சிறப்பு விருந்தினர் திருச்சி கி . ஆ. ப . விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர் G . அனிதா அவர்கள் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து வியந்தததுடன் மட்டுமல்லாது, திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை அனைத்து விதமான அவசர சிகிச்சைகளையும் கையாள கூடிய மருத்துவர்கள் மற்றும் அதிநவீன அவசர சிகிச்சை பிரிவையும் கொண்டிருப்பதை வெகுவாக பாராட்டினார். அது மட்டுமில்லாது மருத்துவர்களுக்கு பயனளிக்க கூடிய இது போன்ற மருத்துவ கருத்தரங்குகளை நடத்துவது குறித்து முயற்சியை பாராட்டியதுடன் மட்டுமல்லாது, மேலும் இது போன்று நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டுகோள் விடுத்தார். 

திருச்சி IIM இயக்குனர் டாக்டர் பீமராய மெட்ரி மருத்துவ துறை அடையும் முன்னேற்றங்கள் மற்றும் அதில் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் பங்களிப்பு குறித்து பேசினார். 

இந்த சிறப்பு கருத்தரங்க மாநாட்டில், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமத் மன்சூர் அவர்கள், தமிழ்நாடு ஓமந்தூர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் கதிரியாக்கு மருத்துவர் டாக்டர். பெரியகருப்பன் அவர்கள், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் பத்மாவதி வெங்கடசுப்பு அவர்கள், திருச்சி ராணா மருத்துவமனை பொதுமருத்துவர் டாக்டர் M . பிரபு குமார் அவர்கள் மற்றும் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் M . அருள் ஒளி ஆகியோர் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் ஸ்டீபன் பிரகாஷ் அருள்தாஸ் அவர்களின் நன்றியுரையுடன் இனிதாய் இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த அதிநவீனசிகிச்சை முறைகளானது கலந்துரையாடல் மற்றும் சிறப்புரைகளாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் 200 கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவரச சிகிச்சை, தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ மேல்படிப்பு மாணவர்கள் இந்த மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

0 comments: