Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தங்கினார்.
மேயர் அ.விசாலாட்சி  பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக கலந்து கொண்ட கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.இயக்கத்தின் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்.ராணுவ கட்டுப்பாட்டுடன் இந்த இயக்கத்தை மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார். அண்ணா திமு.க. இயக்கத்தில் மட்டுமே 1.1/2 கோடி தொண்டர்கள் உள்ளனர் .நடைபெற உள்ள கழக அமைப்பு தேர்தலில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது எந்த விதமான பு கார்களும் இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும்.மற்ற கட்சியைபோல் இல்லை அண்ணா தி.மு.க. மக்கள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் நாம் என்பதை நிருபிக்கும் வகையில் அமைதியாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.எல்.ஏ, க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.
மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளரும், மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நம் மாவட்ட கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்.. அவரது ஆலோசனையின்படி இந்த தேர்தலை அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். மக்கள் முதல்வர் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம் அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்திற்கு நியமிக்கபட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய நிர்வாகிகள் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,பொங்கலூர் எஸ்.சிவாச்சலம், அவினாசி மு.சுப்பிரமணியம், வடக்கு ஒன்றியம் கே.என்.விஜயகுமார், துணை மேயர் சு.குணசேகரன்,வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், அன்னூர் காளியப்பன், அவினாசி ராமசாமி, திருமுருகன் பூண்டி விஸ்வநாதன் உள்ளிட்ட நகர செயலாளர்கள் ஆகியோர்களுக்கு அமைச்சர்கள் கோகுல இந்திரா, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் நிர்வாகிகள் பாரங்களை வழங்கினர்.



கூட்டத்தில் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணி, மண்டலத் தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், ஸ்டீபன்ராஜ், தங்கமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், சிராஜ்தீன், வெ.அய்யாசாமி, வி.கே.பி.மணி, அட்லஸ் லோகநாதன், உஷரவிகுமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, அவினாசி பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள், அன்னூர் சௌகத் அலி, பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, சேவூர் வேலுசாமி, யு.எஸ்.பழனிசாமி, சில்வர் வெங்கடாச்சலம், டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கருணாகரன், கண்ணபிரான், பல்லடம் ஜோதிமணி, சித்ராதேவி, வைஸ் பழனிச்சாமி, சித்துராஜ், தர்மராஜன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், வசந்தாமணி, பிரியா சக்திவேல்,பேபி தர்மலிங்கம் நிர்வாகிகள் ராஜ்குமார், ரத்தினகுமார், அசோக்குமார், யுவராஜ் சரவணன், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, பரமராஜன் நீதிராஜன் மங்கலம் சுப்பிரமணியம், மற்றும் உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: