Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    
திருமங்கலம் அருகே வேப்பமரத்தில் தொடர்ந்து 15 நாட்களாக பால் வடியும் அதிசயம்
திருமங்கலம் அருகே உள்ளது தொட்டியபட்டி கிராமம்.அங்கு சுமார் 300 ஆண்டு பழமையான பெருமாள்–பூதேவி– ஸ்ரீதேவி கோவில் உள்ளது. கோவில் முன்பு பள்ளிக்கூடம் இருந்து வந்தது. பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதும், அங்கு சாவடி கட்டப்பட்டது. சாவடி கட்டப்படும் போது வேப்பமரக்கன்று ஒன்று நடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வேப்பமரம் நன்றாக வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. அதில் கடந்த 15 நாட்களுக்கு மேல் பால் வடிய தொடங்கியது. அதைப்பார்த்த கிராம மக்கள் அதிசயமாக பார்த்தனர். தொடர்ந்து பால் நிற்காமல் வடிந்து கொண்டே உள்ளது. வடியும் பாலை சிலர் ருசித்து பார்த்தனர். கசப்பும், இனிப்பும் கலந்த நிலையில் இருந்துள்ளது.
உடனே கிராமமக்கள் மரத்திற்கு மஞ்சள் துணி சுற்றி பூ மற்றும் மஞ்சள் தடவி சூடம் ஏற்றி வழிபடத் தொடங்கி விட்டனர். மேலும் தொட்டிலும் கட்டி வேண்டுதல் வைத்து வணங்கி வருகின்றனர்.
இது குறித்து கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்னண் (வயது75). விவசாயி கூறியதாவது:–
மரம் வைத்து 20 வருடம் இருக்கும். கடந்த 15 நாட்களுக்கு மேல் மரத்தின் இரண்டு கொப்புகளுக்கு இடையே பால் போன்ற திரவம் தொடர்ந்து வடிந்து கொண்டுள்ளது. கிராமத்தில் வேப்ப மரங்கள் நிறைய உள்ளது. அதில் பெருமாள் கோவில் முன்பு உள்ள மரத்தில் மட்டும் பால் வடிகிறது. எங்களுக்கு அதிசயமாக உள்ளது. எனவே மரத்தை சுற்றிபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, திரிசூலம் வைத்து வணங்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்

0 comments: