Saturday, December 27, 2014

On Saturday, December 27, 2014 by Unknown in ,    
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஊர்வலத்திற்கு திடீர் தடை: போலீஸ் குவிப்பு
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நீக்கி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.
இந்த ஜல்லிக்கட்டு, தைப்பொங்கலின்போது நடைபெறும் என்பதால் இந்த ஆண்டும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாலமேட்டில் இன்று அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டது. பாலமேடு கிராம மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி, கிராம மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் இணைந்து ஊர்வலத்தை நடத்தப்போவதாக தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் ஊர்வலத்திற்கு போலீசார் ‘திடீர்’ தடை விதித்தனர்.
இதனால் பாலமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காந்த சொரூபன் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அலங்காநல்லூரிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

0 comments: