Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னையில் அ.தி.மு.க.பிரமுகரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கூலிப்படையினர் இருவரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 46). அ.தி.மு.க.பிரமுகரான இவர், கடந்த 5-ந் தேதி அன்று, சிந்தாதிரிப்பேட்டையில் அரிவாளால் வெட்டப்பட்டார். பலத்த காயம் அடைந்த இவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் வந்து, கோபிநாத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தட்டான்பழனி என்பவர், முன்விரோதம் காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு, கோபிநாத்தை தீர்த்துக்கட்ட முயற்சித்தது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸ் தேடிய தட்டான் பழனி, பிள்ளையார் கணேசன் ஆகியோர் பூந்தமல்லி கோர்ட்டில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர்.

கூலிப்படையினர் கைது

தட்டான் பழனி ஏவி விட்ட கூலிப்படை ஆசாமிகள் தினேஷ் (வயது 23), கணேசன் (24) ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் தினேஷ் பயங்கர ரவுடி ஆவார். கூலிக்காக ஆள்கடத்தல், கை-காலை வெட்டுதல், தலையை வெட்டி கொலை செய்தல் போன்ற பயங்கர குற்றங்களில் ஈடுபடுபவர், என்று கூறப்படுகிறது.

கூலிக்காக கொலை செய்ய 3 பேர் இவரது பட்டியலில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

இதுபோல கூலிக்காக கொலை செய்யும் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும், ஷிஎன்று கமிஷனர் ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments: