Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஆலந்தூர்,
சென்னை தரமணி பகுதியில் போலீஸ் உதவி கமிஷனர் அழகு உத்தரவின் பேரில், தரமணி இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், போலீஸ்காரர் ஷிபு, இளைஞர் காவல் படை காவலர் விஷ்ணு ஆகியோர் தரமணி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த அப்துல்அலீம் (வயது 39) என்பது தெரியவந்தது.
அவரது ஆட்டோவில் 2 அரிவாள் மற்றும் 3 கத்திகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்த போது ஆட்டோவில் தனது நண்பர்கள் உதவியுடன் ஒருவரை கொலை செய்ய வந்ததாக கூறினார். இதையடுத்து தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அப்துல்அலீமை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

0 comments: