Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு கத்தாரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 30) என்பவர் வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக சதி திட்டம், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற வழக்குகளில் சி.பி.ஐ. போலீசார் அவரை தேடி வருவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரஞ்சித்குமாரை பிடித்து தனி அறையில் அடைத்தனர். இதுபற்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து பிடிபட்ட ரஞ்சித்குமாரை கைது செய்து தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

0 comments: