Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    



திருப்பூர், : திருப்பூர், காங்கயம் ரோடு, கதிர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (33). இவரது பக்கத்து வீட்டில் வசித்தவர் ராக்கியாபளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31). இவர் ராஜேஸ்வரியின் வீட்டின் அருகில் இருந்த போது அவரிடம் இருந்த ஸ்கூட்டியை வாங்கி-்க்கொள்வதாகவும் சிறிது நாளில் பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.  உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதாக கூறி ராஜேஸ்வரியின் 4 பவு்ன் நகையையும் வாங்கி சென்றுள்ளார். 
இந்நிலையில், பிரகாஷ் திடீரென வீட்டை காலி செய்து விட்டதாக தெரிகிறது. கடந்த 25ம் தேதி ராஜேஸ்வரி காங்கயம் ரோட்டில் பிரகாசை பார்த்துள்ளார். அப்போது, பணம், நகையை கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரம் அடைந்த, பிரகாஷ் ராஜேஸ்வரியை தாக்கி காயப்படுத்தியுள்ளார். புகாரின் பேரில் ரூரல் போலீசார் பிரகாசை கைது செய்தனர். 

0 comments: