Sunday, May 03, 2015

On Sunday, May 03, 2015 by Unknown in ,    



பல்லடம் வட்டாரத்தில் ஆட்டுக் குட்டிகளுக்கு ரத்தக் கழிச்சல் நோய் வராமல் தடுப்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடம், சுல்தான்பேட்டை பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்ததாக ஆடு வளர்ப்புத் தொழில் உள்ளது. இந்நிலையில் ரத்தக் கழிச்சல் நோய் பாதிப்பில் இருந்து ஆட்டுக் குட்டிகளைக் காப்பது குறித்து கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பல்லடம் அரசு கால்நடை மருந்தக மருத்துவர் நடராஜன் கூறியது:
ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதி, சூரிய ஒளி படும்படியாக இருக்க வேண்டும்.  ஆட்டுக் குட்டிகள் பிறப்பதற்கு 10 நாள்களுக்கு முன்பே, கொட்டகையின் தரைப் பகுதியை நான்கு அங்குலம் ஆழத்துக்குத் தோண்டி, பழைய மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, அதில் சரளை அல்லது பெருமணலை பரப்பி, சுண்ணாம்புத் தூளை தூவ வேண்டும். கொட்டகைக்குள் இருக்கும் தண்ணீர்த் தொட்டியை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
தரைப் பகுதி அதிக ஈரமில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான குட்டிகளை அடைக்கக் கூடாது. சுவர்களுக்கு சுண்ணாம்பு பூச வேண்டும். அதிக ஈரப்பதமின்றி, சிறிது உலர்ந்த தீவனங்களையே குட்டிகளுக்கு அளிக்க வேண்டும். குட்டி ஈன்றதும், தாயின் மடியை தண்ணீரால் கழுவிய பிறகே குட்டிகளை பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். குட்டிகளை, தாயுடன் முதல் மூன்று நாள்களுக்கு மட்டுமே வைத்திருக்க வேண்டும். பிறகு, பால் குடிக்க மட்டும் அனுமதித்து, குட்டிகளை தனியே அடைக்க வேண்டும் என்றனர்.

0 comments: