Monday, May 04, 2015
இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்பாடு ,சாலை வசதிகள் . குநீர் வசதிகள் ,போக்குவரத்து வசதிகள் . நலத்திட்ட உதவிகள் ,இலவச வீட்டுமனை பட்டா ,பட்டா பெயர் மாற்றம் , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வரப்பெற்றது . அணைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் .திரு .கு .கோவிந்தராஜ் .இ ஆ .ப .அவர்கள் . சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள அறிவுறுதினார் .
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் .மாவட்ட ஆட்சிதலைவர் அவர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் , மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அலுவலர்களின் மனுநீதி நாள் முகாம் மனுக்கள் .மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் குறித்து மேட்க்கொள்ளபட்ட நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சிதலைவர் திரு .கு .கோவிந்தராஜ் இ ஆ .ப.அவர்கள் ஆய்வு செய்தார் .அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் எனவும் மனுதாரர்களுக்கு உரிய பலன்களை . பதில்களை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும் . துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் திரு கு ..கோவிந்தராஜ் .இ .ஆ.ப . அவர்கள் .உத்தரவிட்டார் . அதனை தொடந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 29.04.2015. அன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான தமிழ்நாடு அரசு பணியாளர் விளையாட்டு போட்டிகளில் கூடைபந்து ,கையுந்து பந்து , கபடி .கால்பந்து .மேசைபந்து .இறகு பந்து .டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் ம் மற்றும் சான்றிதல்களை வழங்கினார் . மேலும் அதிக வெற்றிகளை பெற்ற முதலிடம் பிடித்த பள்ளி கல்வித்துறை , இரண்டாம் இடம் பிடித்த ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளுக்கு கேடயங்களை வழங்கினார் . மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற அரசு பணியாளர்களுக்கான இறகு பந்து போட்டியில் மாநில அளவில் தேர்வாகி அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்ற கருவூலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் . திருமதி .ஆனந்த பிரியா , அவர்களுக்கு பாராட்டு ;சான்றிதல்களை வழங்கினார் . இக்குறைதீர்க்கும் நாள்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு .ச.பிரசன்ன ராமசாமி . ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் .திரு .ரூபன் சங்கர்ராஜ் .தனிதுனைசியர் [சமூக பாதுகாப்புத்திட்டம் ] திருமதி .வாசுகி .வருவாய் கோட்டாட்சியர்கள் திரு .முருகேசன் .திரு .ராவனமூர்த்தி .திரு .சாதனைகுரல் .மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பஞ்சாயத்து வளர்ச்சி திரு .கார்த்திகை இரத்தினம் , உதவி ஆணையர் [கலால் ] திரு .லியாகத் , மாவட்ட பிற்படுதப்பட்டோர் நல அலுவலர்கள் திரு .ராஜன் .மாவட்ட வழங்கல் அலுவலர் திரு .செல்வம் .மற்றும் அணைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...


0 comments:
Post a Comment