Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் நிகழாண்டில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி மூலம் ரூ.71 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்தார்.
    விருதுநகர் தெப்பம் பஜார் பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மைய வளாகத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்து முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1925ல் தொடங்கி, தொடர்நது 80 ஆண்டுகளாக நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான சேவையை அளித்து வருகிறது.  கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் திருவிழாக் காலங்களில் 30 சதவீதம் தள்ளுபடி விற்பனையும் செய்து வருகிறது.
நிகழாண்டில் தீபாவளி திருநாளை முன்னிட்டு கோஆப்டெக்ஸில் அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.  பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச்சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஜீன்ஸ் டாப்ஸ், குர்தா வேட்டி, சேலைகள், சுடிதார், வெண்பட்டுச்சேலைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் விற்பனைக்குள்ளன. ஆண்களுக்கான லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் ஆகியவை பல்வேறு வண்ணங்களில் உள்ளன. கோஆப்டெக்ஸின் வலைத்தளமான w‌w‌w.c‌o‌o‌p‌t‌e‌x.c‌o‌m​ என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
மதுரை மண்டல கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 20 விற்பனை நிலையங்களின் மூலம் கடந்தாண்டு ரூ.24.84 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நிகழாண்டில் ரூ.30 கோடிக்கு விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், விருதுநகர் விற்பனை நிலையத்தின் மூலம் கடந்தாண்டு 58.61 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் நிகழாண்டில் ரூ.71 லட்சத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விழாவில், நகராட்சி தலைவர் மா.சாந்தி, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் மஞ்சுளா, மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி, முதுநிலை மேலாளர் கோ.அன்பழகன், மேலாளர் பழனிச்சாமி, துணை மண்டல மேலாளர்(நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


0 comments: