Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts
Friday, October 16, 2015
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இரண்டாவது முறையாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவோம்’ என்றார்.
பொறுப்பு ஏற்றார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அறிவித்தார். இவர் மாவட்ட செயலாளர் ஆவது இது 2வது முறையாகும். மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று அவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சிவகாசி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அருப்புக்கோட்டை வைகைசெல்வன், விருதுநகர் மாபா பாண்டியராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
சாதாரண தொண்டன்
சமானிய குடும்பத்தில் பிறந்து எளிய தொண்டனாக அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்டேன். திருத்தங்கல் பேரூராட்சி செயலாளர், நகர செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. ஆக பணியாற்றினேன். அதனை தொடர்ந்து மாவட்ட செயலாளராகவும் கட்சி பணியாற்றிய என்னை அமைச்சராகவும் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழகு பார்த்தார். உண்மையாகவும், விசுவாசமாகவும் கட்சி பணியாற்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு சேவை செய்தால் அதற்குரிய இடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார் என்பதற்கு இதுவே உதாரணம்.
7 தொகுதிகளிலும் வெற்றி உறுதி
என்னை இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்து கட்சி பணியாற்ற முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வாய்ப்பு தந்துள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட கட்சி பணியாற்றுவேன். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இப்போதே பம்பரம் போல் சுழன்று பணியாற்றிட வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிக் கொடி நாட்ட அனைவரும் அயராது பாடுபட வேண்டும். உங்கள் ஒத்துழைப்போடும், மக்களின் ஆதரவோடும் சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாநில மகளிரணி நிர்வாகி சக்தி கோதண்டம், மாவட்ட பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், இணை செயலாளர் ரமாதேவி குருசாமி, மகளிர் அணி செயலாளர் கவுரி நாகராஜன், விருதுநகர் ஒன்றியக்குழு தலைவர் கலாநிதி, ஒன்றிய செயலாளர் மூக்கையா, நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் முகம்மது நயினார், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், நகர செயலாளர் அசன்பதுருதீன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி (சாத்தூர் கிழக்கு), தேவதுரை (மேற்கு), மயில்சாமி (ஸ்ரீவில்லிபுத்தூர்), சங்கரலிங்கம் (அருப்புக்கோட்டை), ராமமூர்த்தி ராஜ் (காரியாபட்டி), குருசாமி (ராஜபாளையம் மேற்கு), பூமிநாதன் (நரிக்குடி), முத்துராமலிங்கம் (திருச்சுழி), அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முத்துராஜா, நகர செயலாளர் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் வீரகணேஷா, நகர செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருத்தங்கல் சென்று அங்குள்ள தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை
உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர்
வழங்கினர்.
பூஜை உபகரணங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா விருதுநகர் வேலாயுதத்தேவர் பிள்ளையார் கோவில் திருமண மண்டபத்தில் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 380 சிறு கோவில்களுக்கு கோவில் பூசாரிகளிடம் அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் பூஜை உபகரணங்களை வழங்கினர். விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது தெரிவித்ததாவது:-
தமிழக முதலமைச்சர் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 380 சிறு கோவில்களுக்கு வழங்கப்படவுள்ள தூபக்கால், மணி, அகல்விளக்கு மற்றும் தொங்கு விளக்கு அடங்கிய பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அன்னதான திட்டம்
முதலமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் கோவில் அன்னதானத் திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் குடமுழுக்கு, கோவில் பராமரிப்பு, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்தல், போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கோவில்களுக்கும், கிராமப்புறங்களில் உள்ள 132 கோவில்களுக்கும் திருப்பணி வேலைகள் செய்திட தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 17 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்கள். இத்தகைய தாயுள்ளம் கொண்ட முதலமைச்சருக்கு நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பணி நிரந்தரம்
விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:-
முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வருமானம் இல்லாத 10 ஆயிரம் சிறு கோவில்களுக்கு முறையாக பூஜை செய்திட ஏதுவாக ரூ.2.50 கோடி மதிப்பில் பூஜை உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவித்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5.7 லட்சம் மதிப்பில் சிறு கோவில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த தினக்கூலி பணியாளர்களை நிரந்தரப் பணியாளராக காலமுறை ஊதியத்தில் வரன்முறை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் கோவில்களில் பணியாற்றி வந்த 15 பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். நலிவடைந்த கோவில்களில் ஒருகால பூஜையாவது நடைபெற வேண்டும் என்ற உயர்ந்த திட்டத்தின் கீழ் 187 திருக்கோவில்களில் பூஜை நடைபெற்று வருகிறது.
மாத உதவித்தொகை
விருதுநகர் மாவட்டத்தில் பூசாரிகள் நல வாரியத்தில் 2328 கிராமக்கோவில் பூசாரிகள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். கிராமப்புற பூசாரிகள் ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 57 பூசாரிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட முதல்வருக்கு நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி., எம்.எல்.ஏ.
இந்த விழாவில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் வைகைச்செல்வன், பாண்டியராஜன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் சாந்திமாரியப்பன், துணைத்தலைவர் மாரியப்பன், யூனியன் தலைவர்கள் கலாநிதி (விருதுநகர்), வேலாயுதம் (சாத்தூர்), ரேவதிகாசிதுரைபாண்டியன் (வெம்பக்கோட்டை), துணைத்தலைவர் மூக்கையா, நகர்மன்ற உறுப்பினர் முகமது நயினார், உதவிஆணையர் ஹரிஹரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிறு கோவில் பூசாரிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தில் காலிப்
பணியிடம் இருப்பின் அதனைப் பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்
தகுதியான நபர்களைத் தேர்வு செய்யலாம்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்
வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனியார் துறையில்
வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மாதந்தோறும், தனியார் வேலைவாய்ப்பு
முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. எனவே
காலிப்பணியிடம் நிரப்ப விரும்பும் தனியார் நிறுவனங்கள் பணியின் பெயர்,
கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களுடன் கடிதம்
மூலமாகவோ அல்லது க்ங்ர்ஸ்ண்ழ்ன்க்ட்ன்ய்ஸ்ஹஞ்ஹழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற
இ-மெயில் முகவரிக்கோ அனுப்பலாம். பின்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேர்காணல் தேர்வு மூலம் வேலைக்கு ஆள்களைத்
தேர்வு செய்யலாம்.
இவ்வாறு, தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் கலந்து
கொண்டு பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவு மூப்பு
எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
2016இல் நடைபெற உள்ள தமிழக
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என
செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்
கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக பொதுசெயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா,
விருதுநகர் மாவட்டச் செயலராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை
அறிவித்தார். இதனையடுத்து அவர் மீண்டும் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாராக
பதவியேற்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது, அதில் அமைச்சர்
கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது: உண்மையாகவும், விசுவாசமாகவும்
கட்சிப்பணியாற்றினால் அதற்கு உரிய இடத்தை முதல்வர் அளிப்பார். அந்த வகையில்
என்னை இரண்டாம் முறையாக மாவட்ட செயலராக அறிவித்துக் கட்சிப்பணியாற்றும்
வாய்பை முதல்வர் கொடுத்துள்ளார். 2016 இல் தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல்
நடைபெற உள்ளது. அதில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலலிதா
முதல்வராக பதவியேற்பார் என்றார்.
நிகழ்ச்சியில் விருதுநகர் மக்களவைத் தொகுதி
உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியராஜன்,
வைகைச்செல்வன், மாவட்ட அவைத்தவர் விஜயகுமார், பொருளாளர் ராஜவர்மன்,
ஒன்றியச் செயாலர் கருப்பசாமி, திருத்தங்கல் நகரச் செயலர் பொன்சக்திவேல்,
சிவகாசி நகர் மன்றத்தலைவர் வெ.க.கதிரவன், சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர்
சண்முகக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிறகு, சிவகாசி மற்றும்
திருத்தங்கலில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.
Tuesday, October 13, 2015
சிவகாசியில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுமியை போலீசார் சோதனைச்சாவடியில் மீட்டு, 2 வாலிபர்களை கைது செய்தனர்.
1–ம் வகுப்பு மாணவி விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அச்சக அதிபர். இவருடைய மகள் ரிஜிதா (வயது 5), சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
தினமும் சுரேஷ் குமார் தனது மோட்டார் சைக்கிளில் மகளை அழைத்து வந்து பள்ளியில் விட்டு, பின்னர் பள்ளி முடிந்ததும் அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் தனது மகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். பின்னர் மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்ல பள்ளிக்கு வந்தார்.
நீண்ட நேரமாகியும் மகள் பள்ளியில் இருந்து வெளியே வராததால், அதிர்ச்சி அடைந்த அவர் பள்ளியின் வகுப்பறைக்கு சென்று பார்த்தார். அப்போது வகுப்பறையில் யாரும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று பள்ளிக்கு வந்த தனது மகள் மாயமானது குறித்து தெரிவித்தார்.
உடனே பள்ளி முழுவதும் ஆசிரியர்கள் மாயமான பள்ளி மாணவியை தேடினர். ஆனால் மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
கடத்தல் அப்போது சுரேஷ் குமார் செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், உங்கள் மகளை நாங்கள் தான் கடத்தி வைத்திருக்கிறோம். ரூ.1 கோடி கொடுத்து விட்டு மகளை மீட்டுச் செல்லுங்கள் என்று கூறினார்.
இதற்கு சுரேஷ்குமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து ரூ.25 லட்சத்தை கொடுத்து விட்டு மகளை மீட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடந்த அவர், தனது மகள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு, வெள்ளையனிடம் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.
கைது அதன்பேரில், நத்தம்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றில் 2 வாலிபர்களுடன் ஒரு சிறுமி இருப்பதை கண்டனர். பின்னர் அந்த காரில் இருந்த வாலிபர்களை மடக்கி பிடித்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள், பராசக்தி காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் (26), சாட்சியாபுரத்தை சேர்ந்த வின்சென்ட் மகன் வனமுத்துராஜ்(29) என தெரியவந்தது. அவர்கள் சிறுமி ரிஜிதாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரிஜிதாவை மீட்ட போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால் சிறுமியை கடத்தியதாக தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட காளிராஜ், சுரேஷ்குமாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் கழுத்தில் கத்தியுடன் வாட்ஸ் அப்பில் மிரட்டல் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் கடத்தல்காரர்கள் அவருடைய தந்தை சுரேஷ்குமார் செல்போனிற்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் படம் அனுப்பி இருப்பதாக கூறினர். இதனைத் தொடர்ந்து சுரேஷ் குமார் தனது செல்போனில் ‘வாட்ஸ் அப்’பை பார்த்தபோது, அதில் அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்திருப்பது போன்று புகைப்படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அந்த புகைப்படத்தையும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளையனிடம் காண்பித்து புகார் தெரிவித்தார்.

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
சூரிய மின்சக்தி பம்பு
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன் காக்க பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் சூரிய மின்சக்தி நிலையான பேனல் அமைக்கவும், ஆழ்குழாய் கிணற்றில் சோலார் பம்பு செட்டுகள் அமைக்கவும், திறந்தவெளி கிணறு, தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டிகளிலும் சோலார் பம்பு செட்டுகள் அமைக்க மொத்த தொகையில் 80 சதவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
வேளாண்மை பொறியியல் துறை மூலம் அடிப்படை விலையில் 80 சதவீதம் மானியம் போக 20 சதவீத தொகை மற்றும் அதற்கான வரியை விவசாயிகள் செலுத்தினால் போதும். நிலையான பேனல்கள் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 822 மதிப்பில் அமைக்கப்படும்.
80 சதவீத மானியம்
இதற்கு விவசாயின் பங்களிப்புத்தொகை ரூ.95 ஆயிரத்து 342 மட்டுமே, திறந்தவெளி கிணறுகளில் ரூ.5 லட்சத்து 1 ஆயிரத்து 512 மதிப்பில் சூரிய மின்சக்தி பம்பு செட்டுகள் அமைத்து கொடுக்கப்படுகிறது.
இதற்கான விவசாயியின் பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 512 ஆகும். 80 சதவீத மானியாத்தில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விசை குழாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய தகுதியுள்ள விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையை அணுகி கம்ப்யூட்டர் பட்டா அசல், அடங்கல் பட்டா, விசைக்குழாய் அமையும் இடத்தின் நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, சாதிச்சான்று நகல் (பட்டியல் வகுப்பினர் மட்டும்) ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் சூரிய ஒளி விசைக்குழாயை நீர்ப்பாசனம் செய்வதற்கு மட்டுமே உபயோகம் செய்வேன் என உறுதி அளிக்க வேண்டும்.
எங்கு அணுகுவது?
விருதுநகர் மாவட்டத்தில் சூரிய ஒளிக்கு ஏற்ப தானாக இயங்கும் பேனல்கள் மூலம் 21 விவசாயிகள் ஆழ்குழாய் கிணற்றிலும், 39 விவசாயிகள் திறந்தவெளி கிணற்றிலும், 2 விவசாயிகள் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலும் ஆக மொத்தம் 62 விவசாயிகள் சூரியசக்தி பம்பு செட்டுகள் அமைத்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5½ கோடி மதிப்பில்
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
தெரிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவ முகாம்
சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான தேர்வு முகாம் சிவகாசி நவதானிய திருமண மண்டபத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:- தமிழக முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் வளம் பெற எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கி, அவர்களை நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்து அதன் மூலம் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் அரசு பணிகளில் பணிபுரிய 15 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வண்டிகள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள், காலிப்பர், செயற்கை கால், செயற்கை கை, காது கேட்கும் கருவிகள், பார்வையற்றோருக்கான கருப்பு கண்ணாடிகள் மற்றும் ஊன்றுகோல்கள், பிரெய்லி கை கடிகாரங்கள் ஆகிய உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரூ.5½ கோடி நலத்திட்ட உதவிகள்75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகியோருக்கு மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 25,532 நபர்களுக்கு அடையாள அட்டைகளும், 13,017 நபர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். நல வாரிய உறுப்பினர்கள் விபத்தில் மரணமடைந்தால் ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 5,195 நபர்களுக்கு ரூ.5 கோடியே 45 லட்சத்து 47 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சத்து 60 ஆயிரத்து 611 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க 679 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.301 மனுக்கள்முகாமில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக 301 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை உடனடியான பரிசீலனை செய்து தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், சிவகாசி நகர்மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், துணைத்தலைவர் அசன்பதுருதீன், சிவகாசி யூனியன் தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் சுடர்வள்ளி சசிக்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கருப்பசாமி, சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிநிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட அதிமுக இளம்பாசறை மற்றும் இளம்
பெண்கள் பாசறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை
குறித்தும் விஷன் 2023 குறித்தும் அச்சிட்ட துண்டு பிரசுரம் திருத்தங்கலில்
பொதுமக்களிடம் வினியோகிக்கப்பட்டது.
துண்டு பிரசுரத்தை அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர்
தினேஷ், திருத்தங்கல் நகர அதிமுக செயலாளரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான
பொன் சக்திவேல், ஜெயலலிதாபேரவை செயலாளர் ரமணபிரியன், நகர அவைத் தலைவர்
கோயில்பிள்ளை உள்ளிட்டோர் வினியோகம் செய்தனர்
விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர்கள்
சிஐடியூ சங்கம் சார்பில் திங்கள்கிழமை வெளிநாட்டு பட்டாசு இறக்குமதியை
தடைசெய்யக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம்
பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின்
தலைவர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர்
பி.என்.தேவா, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.லாசர் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்துவரும்
பட்டாசுத் தொழிலை பாதுக்காக வெளிநாட்டுப் பட்டாசு இறக்குமதியை தடை செய்ய
வேண்டும். கைத்தொழிலான பட்டாசுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் 12 சதம்
கலால்வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டி சாலை விலக்கில்
தம்மநாயக்கன்பட்டி மற்றும் பரட்டைநத்தம் கிராம மக்களும், பள்ளி மாணவர்களும்
பேருந்து வசதி கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சாலை மறியலுக்கு பி.கல்லுமடம் ஊராட்சி மன்றத்
தலைவர் எஸ்.பெருமாள் மற்றும் வேடநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர்
வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள்
அருப்புக்கோட்டையிலிருந்து இலுப்பையூர், ஆலடிபட்டி வழியாக அம்மன்பட்டி வரை
போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறும், போதிய சாலை வசதி செய்து
தருமாறும் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வருவாய்த் துறை
அதிகாரிகளும், ம.ரெட்டியபட்டி காவல் துறையினரும் அவர்களிடம் சமரசப்
பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதுபற்றி கல்லுமடம் மற்றும் வேடநத்தம் பொதுமக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களுக்கு போதிய சாலை வசதியில்லை.
அத்துடன் பள்ளி மாணவர்கள் 6 கி.மீ. நடந்து வந்து தான் பேருந்தில் பயணம்
செய்ய வேண்டி உள்ளது.
எனவே அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்து வசதி செய்து தரவேண்டும் என கேட்டுக் கொண்டனர்
விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி
வாரிய குடியிருப்புகளை அகற்ற வேண்டுமென அரசு ஊழியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
விருதுநகர்-சூலக்கரை இடையே 300 ஏக்கர் பரப்பளவில்
ஒருங்கிணைந்த ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டது. இவ்வளாகத்தில் அரசின்
பல்வேறு துறைகளின் அலுவலகமும் இயங்கி வருகிறது. அனைத்து துறைகளிலும்
அலுவலர்கள், ஊழியர்கள் என 1,200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இவர்கள் எளிதாக வேலை பார்த்துச் செல்லும் வகையில்,
இவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் தங்குவதற்காக ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் பல
கோடி ரூபாய் செலவில் கடந்த 1985ல் 745 அடுக்கு மாடி குடியிருப்புகள்
கட்டப்பட்டன.
இக்குடியிருப்பு வளாகங்களில் ஏ மற்றும் பி பிரிவு
வீடுகள் அரசு துறை அதிகாரிகளுக்காகவும், சி,டி,இ பிரிவு வீடுகள்
ஊழியர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு குடியிருப்பு வளாகமும்
தலா 2 தளங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.
இப்பகுதியில் பூங்கா, கலையரங்கம், விளையாட்டு
மைதானம், கோயில்கள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், ஆழ்குழாய்
கிணறுகள், சாலை வசதி, மின்சார வசதி, தொலைத்தொடர்பு வசதி மற்றும் ரேஷன் கடை
என அனைத்து வசதிகளும் இருந்தன.
இங்கு வசிக்கும் அரசு ஊழியர்களுக்கு அவர்களது மாத
ஊதியத்தின் அடிப்படையில் குறைந்த அளவே வாடகை நிர்ணயித்து, ஊதியத்திலிருந்தே
அத்தொகையும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால்
கட்டப்பட்ட அலுவலர்கள் குடியிருப்புகள் 26 ஆண்டுகளில் பழுதடைந்தது. தற்போது
இடிந்து விழும் நிலையில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசு ஊழியர் சங்கத்தின் செயலாளர்
ச.கண்ணன் கூறுகையில், எல்லா மாவட்டங்களில் அரசு வீட்டுவசதி வாரிய
குடியிருப்பு வளாகங்கள் உள்ளன. அதேபோல், இம்மாவட்டத்திலும் இருந்தன. ஆனால்,
வீட்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலும், சிமெண்ட் தளமும்
பெயர்ந்தும் இருந்தது. அதோடு, மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண்
ஒருவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதுபோன்ற
காரணங்களால் கடந்த 2011ல், இக்குடியிருப்பு வளாகங்கள் குடியிருக்க
தகுதியற்றவை என அறிவித்து, அதில் வசித்து வந்த அரசு அலுவலர்கள் மற்றும்
ஊழியர்கள் குடும்பங்கள் அனைத்தும் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்நது அலுவலர்கள் குடும்பத்தினர்
விருதுநகரில் தங்க வீடு கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். பலர்
வெளியூர்களில் குடியேறி அங்கிருந்து பேருந்து மற்றும் ரயில்களில் வந்து
செல்கின்றனர் என்றார்.
இது தொடர்பாக விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் கூறுகையில், இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர்
தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இம்மாவட்டத்தில் அரசு வீட்டுவசதி
வாரியத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் தகுதியற்றவையாக இருப்பதை அகற்றிவிட்டு,
புதிதாக அமைக்க வேண்டும் என்பது குறித்து சட்டப்பேரவை கூட்டத்தில்
பேசினேன். அதன் அடிப்படையில் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டு
ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே பணிகள் விரைவில்
தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் தனியார் மெட்ரிக் உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவ–மாணவிகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமாக வேன் உள்ளது. இன்று காலை பள்ளி வேன் வழக்கமாக மாணவ–மாணவிகளை அழைத்துவர புறப்பட்டது. வேனை சிவஞானம் என்பவர் ஓட்டினார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பொய்யாங் குளத்துக்கு சென்ற வேன் அங்கிருந்து 70–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
நேற்று இரவு அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே டிரைவர் மெதுவாக வேனை ஓட்டி வந்தார். பொய்யாங்குளம் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் வந்தபோது ஈரமாக இருந்த மண் சரிந்தது. இதில் வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் உள்ளே இருந்த மாணவ–மாணவிகள் 38–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கூக்குரலிட்ட அவர்களை அப்பகுதியினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாசில்தார் ரெங்கசாமி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், இந்தியா நினைவு குடியிருப்பு வீடுகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், அங்கன்வாடி மையங்கள், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம் ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு வருகிறதா? என தேசிய கண்காணிப்பு குழுத் தலைவர்கள் வெங்கட் ரமணா மற்றும் சரோஜா ஆகியோர் அச்சந்தவிழ்ந்தான் மற்றும் அத்திகுளம் செங்குளம் ஊராட்சிகளில் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்
அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில்விடக் கோரி
ரயில்வே உயரதிகாரியிடம் அபூர்வா ரயில் பயணிப்போர் சங்கத்தினர் திங்கள்கிழமை
மனு அளித்தனர்.
அருப்புக்கோட்டை ரயில் சந்திப்பில் ஆய்வுப் பணிக்காக
திங்கள்கிழமை தென்னக ரயில்வேயின் மதுரைக் கோட்ட மேலாளர் சுனில்குமார்
கார்க், மதுரைக் கோட்ட கூடுதல் மேலாளர் ஆர்.வி.எஸ்.பாபு நேரில் வந்தனர்.
அவர்களை அருப்புக்கோட்டை வட்டார ரயில் பயணிப்போர்
நலச்சங்கத்தினர் (அபூர்வா சங்கம்) நேரில்
சந்தித்து,அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் விடக் கோரி மனு
அளித்தனர். அதற்கு பதிலளித்த ரயில்வே உயரதிகாரிகள் அருப்புக்கோட்டை
சந்திப்பில் போதிய அளவிற்கு பயணிகள் போக்குவரத்தும் பண வசூலும் உள்ளதால்
நிச்சயம் சென்னைக்கு ரயில்விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
உறுதியளித்தனThursday, October 08, 2015
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் தொழில்
முனைவோர் பயன்பெறும் வகையில் அரசு மானியத்துடன் 107 நாட்டுக்
கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கால்நடைத்துறை துணை
இயக்குநர் கார்த்திக் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் அவர் புதன்கிழமை கூறியதாவது:
அரசு சிறப்பு கோழிப்பண்ணை வளர்ப்புத் திட்டம் மூலம் இறைச்சி கோழிப்பண்ணைத்
தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 2012-13 முதல் தீவிரமாக இப்பண்ணைத்திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்
பயன்பெறும் வகையில் நிகழாண்டில் நாட்டுக்கோழிகள் வளர்க்கும் திட்டத்தை
செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 107
நாட்டுக்கோழிப்பண்ணைகள் வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் ரூ.1.29 லட்சம் முதலீட்டில் 250
நாட்டுக்கோழிகள் கொண்ட பண்ணைகள் அமைக்கலாம். அதிலும் விருப்பம் உள்ள
பயனாளிகள் சுய மூலதனமாகவோ அல்லது வங்கி நிதி உதவியுடனோ பண்ணை அமைக்க
கால்நடைத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே இறைச்சிக்கோழி
வளர்ப்பில் பண்ணைகள் அமைத்துள்ள பயனாளிகள் மீண்டும் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தில் பயன்பெற கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த
விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர் ஆகியோர் அந்தந்த பகுதியில் உள்ள
கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பிக்கலாம். இவர்களிடம் நாட்டு கோழிப்பண்ணை
அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ
இருக்க வேண்டும்.
இதில், தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு
நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி விரிவான பயிற்சி அளிக்கப்படும். எனவே
இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள்,
கோட்ட அலுவலகம் அல்லது மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு
விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் 2
வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் முகாமை
ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற
முகாமிற்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும்
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.கோவில்பட்டி
அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் அனிதா, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இம்முகாம் அக்.13ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம்
ஊராட்சியில் இந்திர தனுஷ் தடுப்பு ஊசி போடும் சிறப்பு முகாம் புதன்கிழமை
நடைபெற்றது.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் தலைமை வகித்து, முகாமை துவக்கிவைத்தார்.
வட்டார மருத்துவ அதிகாரி கருணாகரபிரபு, உதவியாளர் கலசலிங்கம் கிருஷ்ணாபுரம் ஊராட்சித்தலைவர் நம்பிராஜன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில்
உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு வயது வரையுள்ள
குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த
முகாம் மூலம் தடுப்பூசி போடப்படும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தன
விருதுநகர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உலக வங்கி குழுவினர் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், வெம்பக்கோட்டை,
நரிக்குடி, வத்திராயிருப்பு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த 2012 முதல்
புதுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்
செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக உலக வங்கியின் ஆலோசகர் வரலட்சுமி, மாநில
வல்லுநர் பெஞ்சமின் விக்டர் ஆகியோர் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள
படந்தால் கிராமத்தில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு
செய்தனர்.
அப்போது, வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் கலந்து
கொண்ட கூட்டத்தில், கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சங்கம்
மூலம் உடனடி உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும், இச்சங்கம் தொடர்ந்து
செயல்படுவதற்கு தேவையான நிதி தேவையையும், வாழ்வாதாரத்திற்கான தொழில்களையும்
பெருக்கிக் கொள்ளும் வகையில் தொலைநோக்குத் திட்டத்தை தயாரித்து கடைபிடிக்க
வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து தனியார்
தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ மற்றும் பாதுகாப்பு பயிற்சி, டீசல் இயந்திர
பழுதுநீக்கம் பயிற்சி, டீசல் மரைன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பல்வேறு
பயிற்சி பெறுகிறவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், பிரபல செல்லிடப்பேசி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.
ஆய்வின் போது, விருதுநகர் மாவட்ட புதுவாழ்வு திட்ட
மேலாளர் சண்முகராஜ், அனைத்து உதவி திட்ட மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அப்பகுதி புதுவாழ்வு திட்ட களப்பணியாளர்கள் செய்திருந்தனர்
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை
வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாலை
சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மண்டல அரசுப் போக்குவரத்து கழக
அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை
செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டம்
குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இதில், போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும. 10 மாத
அகவிலைப்படியை வழங்குதல், கழகத்திற்கு அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம்
கோடியை வழங்க வேண்டும், காலாவதியான பேருந்துகளை உடனே மாற்ற வேண்டும் என்பது
உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிறைவாக
மாநில துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.
Friday, October 02, 2015
ராஜபாளையம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்தவர் அய்யச்சாமி (வயது35). மொரம்பு பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ் என்ற இருதயசாமி (50).
இவர்கள் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 15.5.2015–ல் கார் லைசென்சுக்கான பேட்ஜ் கேட்டு விண்ணப்பித்தனர்.
அப்போது அவர்கள் கொடுத்த பள்ளி சான்றிதழ் போலியானது என தற்போது தெரியவர, வட்டார போக்குவரத்து அலுவலர் மகாதேவன் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து அய்யச்சாமி மற்றும் இருதயராஜை கைது செய்தனர்.

விருதுநகரில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் எதிரே
கொட்டப்படும் பல்வேறு கழிவு குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதை
உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் தேசபந்து மைதானம் அருகே வெயிலுகந்தம்மன்
திருக்கோயில் உள்ளது. இப்பகுதிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு
செய்வதற்காகவும், பல்வேறு பகுதிகளில் இருந்து பொருள்கள் வாங்குவதற்காகவும்
வந்து செல்கின்றனர். இப்பகுதியில் பழக்கடைகள், பூக்கடைகள், சிற்றுண்டி
நிலையங்கள் என பல்வேறு கடைகள் உள்ளன. இக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும்
கழிவுகள் மற்றும் குப்பைகளை கோயில் எதிரே கொட்டுகின்றனர். இதனால்
ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும்
பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே
நகராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்
விரும்புகின்றனர்.
இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில்,
நகராட்சி பகுதியில் குப்பைகள் அனைத்தும் ஒவ்வொரு நாளும் அகற்றுவதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கோயில் வளாகம் முன்பு
குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனே அகற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என
அவர் தெரிவித்தார்
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...