Thursday, October 08, 2015

On Thursday, October 08, 2015 by Unknown in ,    
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    மத்திய சுகாதார துறையின் சார்பில் 2 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு  சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓ.கோவில்பட்டி அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் அனிதா, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
   இம்முகாம் அக்.13ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
ராஜபாளையம்: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இந்திர தனுஷ் தடுப்பு ஊசி போடும் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
  ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் தலைமை வகித்து, முகாமை துவக்கிவைத்தார்.
  வட்டார மருத்துவ அதிகாரி கருணாகரபிரபு, உதவியாளர் கலசலிங்கம் கிருஷ்ணாபுரம் ஊராட்சித்தலைவர் நம்பிராஜன் முன்னிலை வகித்தனர்.
  முகாமில் கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு வயது வரையுள்ள குழந்தைகள், மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த முகாம் மூலம் தடுப்பூசி போடப்படும் என மருத்துவக் குழுவினர் தெரிவித்தன

0 comments: